Friday, October 9, 2026

பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் விசேட திட்டம்


பண்டிகைக் காலத்தில் பொதுப் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதற்கும், அமைதியான கொண்டாட்டத்திற்குத் தேவையான சூழரல உருவாக்குவதற்கும் இராணுவத் தலைமையகத்தை மையமாகக் கொண்ட ஒரு செயல்பாட்டு அறையை நிறுவ பாதுகாப்புச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

பண்டிகைக் காலம் முடியும் வரை தொடர்ந்து செயல்படும் இந்த செயல்பாட்டு அறை, முப்படைகளுக்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை உறுதி செய்யும் முக்கிய ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்படும்.

பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பாதுகாப்பு சவால் அல்லது அவசரநிலைக்கும் உடனடி, ஒழுங்கான மற்றும் உகந்த பதிலை உறுதி செய்வதே இந்த கூட்டு ஒருங்கிணைப்பு பொறிமுறையின் முதன்மை நோக்கமாகும். 

you may also like