Wednesday, October 7, 2026

நாட்டின் புதிய பிரதம நீதியரசர் - ஜனாதிபதி பரிந்துரைப்பு!


நாட்டின் புதிய பிரதம நீதியரசர் - ஜனாதிபதி பரிந்துரைப்பு!

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.

தற்போதைய பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ 27ஆம் திகதி அன்று ஓய்வு பெற உள்ள நிலையில், இதற்கான இறுதி முடிவை எடுக்க அரசியலமைப்பு சபை நாளை (23) கூடவுள்ளது.

பிரீத்தி பத்மன் சூரசேன, நீதித்துறை சேவை ஆணையத்தில் பணியாற்றிய அனுபவமுள்ளவராகவும், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதியாகவும், தேசபந்து தென்னகோன் தொடர்பான விசாரணை குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like