Wednesday, October 7, 2026

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: பொது வெளியில் தோன்றினார் இளவரசி கேட் மிடில்டன்


பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் பொது வெளியில் தோன்றி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரித்தானிய வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், வயிற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் பின்னர், பொதுவெளியில் தோன்றாமை பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதனைதொடர்ந்து அவர் ஓய்வெடுத்து வருகின்றார் என்றும் விரைவில் பொது வெளியில் தோன்றுவார் எனவும் செய்திகள் வெளியாகின.

எனினும், கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பிறகு வேல்ஸ் இளவரசி பொதுவெளியில் தோன்றாமையினால் பல வதந்திகள் எழுந்தன.

அத்துடன் சமீபத்தில் அன்னையர் தினத்தில் இளவரசர் வில்லியம் தவிர்த்து, குழந்தைகளுடன் கேட் மிடில்டன் இருக்கும் புகைப்படம் ஒன்றை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டது.

இந்தப் புகைப்படமும் பொது வெளியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இளவரசர் வில்லியமுடன் பண்ணை கடை ஒன்றுக்கு சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

you may also like