- by Editor
- 2 years ago
வரலாறு படைத்த நிலா பயணம்! ஒராயன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
-
- by Editor,
- 5 months ago
- in உலக செய்திகள்
ஆர்டெமிஸ் II திட்டத்தின் கீழ் நிலாவை நோக்கி மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப் பயணத்தை நிறைவு செய்த ஒராயன் விண்கலம், தனது ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்து பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று (11) அதிகாலை 5.30 மணியளவில், கலிபோர்னியாவின் சென் டியாகோ கடற்கரைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் ஒராயன் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
மொத்தம் 10 நாட்கள் நீடித்த இந்த விண்வெளிப் பயணம், ஏப்ரல் 6ஆம் திகதி தொடங்கப்பட்டு நிலவை நோக்கிச் சென்றது.
இந்தப் பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் 406,771 கிலோமீட்டர் (252,756 மைல்கள்) தூரத்தை கடந்துள்ளனர்.
இதன் மூலம், மனிதர்கள் விண்வெளியில் இதுவரை சென்றுள்ள அதிகூடிய தூரப் பயணமாக இது புதிய வரலாற்றை படைத்துள்ளது