- by Editor
- 8 hours ago
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக அறிவாலயம் செல்கிறார் கமல்ஹாசன்
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. குழுவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் செல்லவிருக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. வி.சி.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டி உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகிவந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் கமலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகின்றேன் என வெளிப்படுத்தி இருந்தார்.
தொடர்ந்து தி.மு.க. உடன் மக்கள் நீதி மய்யம் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. குழுவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், இன்று தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நேரடியாக செல்வதால் தொகுதி பங்கீடு இன்றே இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.