Wednesday, October 7, 2026

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை


முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

குறித்த வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பரிசீலித்த நீதிமன்றம், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கில் பிரதிவாதிகளான இருவரையும் விடுதலை செய்ய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்திருந்தது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சியங்கள் மீண்டும் அழைக்கப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுப்பதில் அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்கள் தொடர்பில் நீண்டகாலமாக இடம்பெற்ற விசாரணையின் பின்னரே இன்றைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

you may also like