- by Editor
- 3 months ago
நாகை - காங்கேசன் இடையே தொடங்கியது கப்பல் சேவை
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை பயணிகள் கப்பல் போக்குவரத்தை, புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாகை மக்களவை உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் ஆகியோர் கொடியசைத்து, தொடங்கி வைத்தனர்.
இந்தியா - இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23 ஆம் திகதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக அந்தமானில் இருந்து 'சிவகங்கை' கப்பல் நாகை துறைமுகத்திற்கு கடந்த வாரம் வந்தது.
இந்தக் கப்பலுக்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.