Friday, October 9, 2026

நாரம்மல துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு


குருநாகல், நாரம்மல பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த லொறிச் சாரதியின் உறவினர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சாரதியின் அலவ்வ பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இந்தத் தொகையை இன்று வழங்கினார்.

குடும்ப உறுப்பினர்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தவரின் உடலுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் விசாரணை முடிவடையும் வரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்படி இருவரும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 

you may also like