Friday, October 9, 2026

தேர்தலை எதிர்கொள்ள சு.கவினர் புதிய வியூகம்; விசேட குழுவை அமைத்த மைத்திரி


அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலை முகங்கொடுக்கத் தயாராகின்றது.

அந்தவகையில் தேர்தலுக்கான நகர்வுகளை முன்னெடுக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசேட குழுவொன்றை நியமித்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசிய மட்டத்திலான தேர்தல்களில் சுதந்திரக் கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும், அதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்களை இந்தக் குழு தீர்மானிக்கும் என்றும் மைத்திரிபால குறிப்பிட்டார்.

"எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டும். அதற்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இக்குழு கூடவுள்ளது. அதேவேளை, எதிர்வரும் தேர்தலுக்கான தயார்படுத்தல்களை ஆரம்பித்துள்ளோம்" - என்றும் சு.கவின் தலைவர் மைத்திரிபால மேலும் கூறினார். 

you may also like