- by Editor
- 8 months ago
இன்றைய தங்க விலை மாற்றமின்றி நிலைநிறுத்தம்
-
- by Editor,
- 5 months ago
- in இலங்கை செய்திகள்
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் (07) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்றும் அதே விலை நிலவரமே தொடர்கின்றது என சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் ஒரு பவுண் 398,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் 366,200 ரூபாயாக விற்பனை ஆகிறது.
மேலும்,
24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,750 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,775 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப தங்க விலையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவது வழக்கமானதாயினும், இன்றைய தினம் விலை மாற்றமின்றி ஸ்திரமாக நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.