- by Editor
- 2 years ago
மோட்டார் வாகனப் பதிவு தொடர்பான முறைப்பாடுகளுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம்
-
- by Editor,
- 2 weeks ago
- in இலங்கை செய்திகள்
மோட்டார் வாகனப் பதிவின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள் தொடர்பில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காக புதிய வட்ஸ்அப் (WhatsApp) இலக்கமொன்றை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, மோட்டார் வாகனப் பதிவு தொடர்பில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள் குறித்து 074 245 3300 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக எழுத்து மூலம் முறைப்பாடுகளை அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பிரச்சினைகளை விரைவாக அடையாளம் கண்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்கும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.