Wednesday, October 7, 2026

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு


தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகளின் திகதிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2023/2024 கல்வியாண்டுக்கான க.பொ.த (உயர்தரம்) பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த சேர்க்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேர்முகத் தேர்வுகள் 2026 ஏப்ரல் 21ஆம் திகதி முதல் மே 08ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்முகத் தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களிலுள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளன.

மேலும், நேர்முகத் தேர்விற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk 

 இல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

you may also like