Thursday, October 8, 2026

இரகசியம் - பரகசியம் (18.04.2024)


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்தமை மற்றும் சம்பள உயர்வு வழங்காமை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் கறுப்புப்பட்டி அணிந்து கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

you may also like