Thursday, October 8, 2026

தராகி சிவராம், ரஜிவர்மன் ஆகியோருக்கு வடமராட்சி ஊடக இல்லத்தில் நினைவேந்தல்


ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராசா ரஜிவர்மனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் நேற்று உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது .

வடமராட்சி ஊடக இல்லத்தின் ஊடக உறுப்பினர் முருகப்பெருமான் மதிவாணன் தலைமையில் ஊடக இல்லத்தில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொது சுடரினை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராசா ரஜிவர்மனின் தாயார் ஏற்றி வைக்க, தராகி சிவராமின் திருவுருவ படத்திற்கான மலர் மாலையினை யாழ். பல்கலைக்கழக பீடாதிபதி ரகுராம் அணிவித்தார்

தொடர்ந்து ரஜிவர்மனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அணிவித்திருந்தார்

 இந்த நினைவேந்தலில், யாழ். பல்கலைைக்கழ ஊடக துறை விரிவுரையாாளர் ரகு ராம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராாசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுுரேஸ் பிரேமச்சந்திரன் , முன்னாாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் , ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டடிருந்தனர்.  

you may also like