Friday, October 9, 2026

தெஹியோவிட்ட கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை


நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்று (22) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ருவன்வெல்ல பகுதியில் உள்ள 3 பாடசாலைகளும், தெஹியோவிட்ட பகுதியில் உள்ள மேலும் 3 பாடசாலைகளும் மூடப்பட்டு, மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பப்படுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதைய காலநிலை மற்றும் வெள்ள நிலவரத்தை கருத்தில் கொண்டு, ஏனைய பாடசாலைகளை தொடர்ந்து நடத்துவதா அல்லது தற்காலிக விடுமுறை வழங்குவதா என்பது தொடர்பான முடிவுகளை அந்தந்த பாடசாலை அதிபர்கள் மேற்கொள்ளலாம் என தெஹியோவிட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.எல். ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடும் மழை காரணமாக கேகாலை – அவிசாவளை பிரதான வீதி, தெஹியோவிட்ட பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

you may also like