- by Editor
- 2 years ago
ஹெய்டி பிரதமர் பதவி விலகினார்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
ஹெய்டியின் பிரதமர் ஏரியல் ஹென்றி பதவியில் இருந்து விலகியுள்ளார் என கயானாவின் ஜனாதிபதியும், தற்போதைய கரீபியன் சமூகத்தின் தலைவருமான மொஹமட் இர்ஃபான் அலி தெரிவித்துள்ளார்.
அங்குள்ள நிலைமை தொடர்பில், ஆராய்வதற்காக அவசர உச்சி மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், 74 வயதான ஹென்றி தமது பதவியில் இருந்து விலகியுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
ஹெயிட்டி பிரதமர் ஏரியல் ஹென்றியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், கடந்த வாரம் விமான நிலையம், பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகள் மீதான தாக்குதல் அதிகரித்திருந்தன.
இதனால் தமது அத்தியாவசியமற்ற தூதரக ஊழியர்களை விமானம் மூலம் அமெரிக்காவும் வெளியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.