Friday, October 9, 2026

சில பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, பலத்த காற்று மற்றும் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

you may also like