- by Editor
- 2 years ago
இண்டியா கூட்டணி கூட்டத்தில் த.வெ.க. பங்கேற்பு: ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் நடக்கும்
-
- by Editor,
- 10 hours ago
- in இந்திய செய்திகள்
தமிழக அளவில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஆளும் த.வெ.க. பங்கேற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக எதிர்வரும் 13, 14, 15 ஆம் திகதிகளில் தொடர் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: இண்டியா கூட்டணியில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள தவெகவை கூட்டணிக் கட்சிகள் மனப்பூர்வமாக வரவேற்கின்றன. இந்த அரசியல் முடிவை எடுத்த முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த பாராட்டுகள். சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.தேர்தல் ஆணையத்தைக் கருவியாகப் பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா கூட்டணியைக் கண்டிப்பதோடு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
ஜனநாயகப் படுகொலையை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பெயரில் ஒக்டோபர் 13, 14 ஆம் திகதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இண்டியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக, 15 ஆம் திகதி சென்னை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் தமிழக இண்டியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.