Monday, October 5, 2026

அங்கஜன் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் மேலும் இரு எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர்.

அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச்செயலாளரும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால எம்.பி. ஆகியோரே ரணிலுக்குத் தமது ஆதரவை வழங்குகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

மேற்படி இருவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் இன்று முற்பகல் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரின் வெற்றிக்காகத் தம்மை அர்ப்பணிகின்றனர் என்று உறுதியளித்துள்ளனர். 

you may also like