Saturday, October 10, 2026

திருமலை விபத்தில் இளைஞர் ஒருவர் பலி


திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை, மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் வீதியோரத்தில் உட்கார்ந்திருந்திருந்தபோது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த 17 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.

அந்த இளைஞரின் சடலம் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குச்சவெளி - நாவல்சோலை பகுதியைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் (வீதியில் இருந்த நபர்) குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

you may also like