Saturday, October 10, 2026

ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை


மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் அடிப்படையில், ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.டி. ராஜகருணா, இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 414 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 495 ரூபாயாகவும் தொடர்ந்தும் அமலில் இருக்கும்.

அதேவேளை, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 382 ரூபாயாகவும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 478 ரூபாயாகவும் மாற்றமின்றி தொடரும்.

மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலையும் 285 ரூபாயாகவே தொடரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

you may also like