- by Editor
- 1 year ago
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் 12 இலட்சத்தை நெருங்கினர்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் சுற்றுலாத்துறை குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக கூறினார்.
மேலும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு செலாவணி வருமானம் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த சாதகமான முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும் என்ற நம்பிக்கையையும் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க வெளியிட்டார்.
சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.