Saturday, October 10, 2026

த.வெ.க சார்பில் தீபாவளி கொண்டாட வேண்டாம்


கரூர் துக்க சம்பவத்தையொட்டி, த.வெ.க. கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரூரில் நடந்த த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், தற்போது, த.வெ.க. கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி தனது எக்ஸ் தளத்தில்,

“கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் நம்மைவிட்டுப் பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், த.வெ.க. தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு கழகத்தின் சார்பில் யாரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


you may also like