- by Editor
- 2 years ago
அறவழிப் போராட்டத்துக்கு சுமந்திரன் அறைகூவல்!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
"தமிழர்களின் போராட்டம் நீதிக்கான போராட்டம், நியாயமான அரசியல் உரிமைகளுக்கான போராட்டம். அநீதி, அநியாயம் ஒருபோதும் வென்றதில்லை, எமது போராட்டம் நீண்ட நெடியதானதாக இருந்தாலும், அறவழியில் சாத்வீக முறைகளைக் கைக்கொண்டு அதிலிருந்து அணுவளவும் பிசகாமல் போராடுவோமானால் எமக்கான நீதி கிடைத்தேயாகவேண்டும். அப்படியானதொரு தூய்மையான அறவழிப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன். எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு சேர்ந்து பயணிப்போம்."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தையொட்டி 'முக்கால் நூற்றாண்டு போராட்டமும் எமது தேசத்தின் எதிர்காலமும்' எனும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.