Thursday, October 8, 2026

தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்.


தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்.

தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பிற்கான சர்வதேச நீதி கோரியும், தமிழருக்கான நீதியை வலியுறுத்தியும் முல்லைத்தீவில் இன்று (26) பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த போராட்டம், வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவின் மாவட்டச் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இதற்கு முன், வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய போராட்டங்கள் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்த நிலையில். வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டமானது இடம்பெற்ற வண்ணம் காணப்படுகின்றது.

இப் போராட்டத்தில்,பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தபிசாளர் லோகேஸ்வரன் , கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜுட்சன்,வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி லவகுசராசா, மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may also like