- by Editor
- 8 months ago
நெடுஞ்சாலையில் சென்ற கார்களில் மோதி விபத்துக்குள்ளானது அமெரிக்க விமானம்!
-
- by Editor,
- 1 year ago
- in உலக செய்திகள்
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது மோதி இரண்டாக முறிந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
தெற்கு டெக்சாஸின் விக்டோரியாவில் உள்ள ஸ்டேட் ஹைவே லூப் நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நெடுஞ்சாலைக்கு மேல் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த மேற்படி விமானம் திடீரென நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது மோதி கீழே விழுந்து இரண்டாக முறிந்தது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து தொடர்பான காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.