Sunday, October 11, 2026

ட்ரம்ப்புடன் பேச்சு இல்லை என கனடா பிரதமர் திட்டவட்டம்


கனடாவை இறையாண்மை கொண்ட நாடாக மதிக்கும் வரையில் பேச்சுவார்த்தை இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட கனடா வணிகர்களை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேசினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகுப்புகளையும், வளத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கார்னி அறிவித்தார்.

கனேடிய போர் அருங்காட்சியகத்தில் அவர் பேசுகையில்,

''வர்த்தகப் போரினால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதால், அதனைத் தடுக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விரும்புவார். அவர்கள் எப்போது வந்தாலும் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும், இறையாண்மை கொண்ட நாடாக கனடாவுக்கான மரியாதை கிடைக்கும்வரையில் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடக்காது.'' என்றார்.

you may also like