Monday, October 12, 2026

இனவாதிகளைக் கூண்டோடு சிறையில் அடைக்க வேண்டும்: ரணிலிடம் மைத்திரி இடித்துரைப்பு


"தமிழ் - முஸ்லிம் - சிங்கள மக்கள் இடையே இனவாதத்தைக் கக்கி வன்முறையைத் தூண்ட முயற்சிப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்த விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயக்கம் காட்டக்கூடாது."

- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில்,

"இனவாதிகளால் நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அரசு கைது செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் எனச் சகல தரப்பினர்களிடையே இனவாதம் கக்குவோர் வெளிப்படையாக நடமாடுகின்றார்கள். அவர்களை அரசு கைது செய்ய வேண்டும்.

இனவாதிகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரலாம் அல்லது ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எவரும் நினைத்தால் அது முட்டாள்தனம். இனவாத ஆட்சி ஒருபோதும் நிலைக்காது." - என்றார். 

you may also like