- by Editor
- 9 months ago
உலகத் தமிழர் பேரவையைச் சந்திக்க மறுப்புத் தெரிவித்த கஜேந்திரகுமார்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சந்திப்பதற்குக் கேட்டபோது அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்துப் பதில் வழங்கியுள்ளார்.
இருவருக்கும் இடையில் பரிமாறப்பட்ட குறுந்தகவல்கள் வருமாறு:-
சுரேந்திரன்:- அன்புள்ள கஜேன். இது உலகத் தமிழர் பேரவையிலிருந்து சுரேந்திரன். நான் உங்களை எப்போது அழைப்பது வசதியாக இருக்கும் என்பதைத் தெரிவிக்கவும். நன்றி.
கஜேந்திரகுமார்:- சுரேந்திரன், உங்களோடும் உங்கள் குழுவில் உள்ளவர்களோடும் பேச ஒன்றுமில்லை. யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து இந்த அரசு மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கியே வந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மாவீரர் வாரத்தில் மக்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டு தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். குறிப்பாக பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய காலகட்டத்தில், அதுவும் தாயகத்தில் இருந்து ஒரு அமைப்புடன் கூடக் கலந்தாலோசிக்காமல் அரசுக்கு வெள்ளையடிக்கும் வேலையையே செய்தீர்கள். தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் நலன்களுக்கு எதிராக உங்கள் அமைப்பு பல ஆண்டுகளாகப் போதுமானளவு செய்துள்ளது. இவை உங்கள் சமீபத்திய நடத்தையில் எதுவும் மாற்றமில்லை என்பதையே காட்டுகின்றது.