Saturday, October 3, 2026

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கைக்கு 356 ஓட்டங்கள் வெற்றி இலக்கு


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 355 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Tom Banton அதிகபட்சமாக 126 ஓட்டங்களைப் பெற்றார். அணித்தலைவர் Harry Brook 77 ஓட்டங்களையும், Jordan Cox 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் Asitha Fernando 3 விக்கெட்டுகளையும், Sachindu Colombage 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்படி, போட்டியில் வெற்றி பெற இலங்கை அணிக்கு 356 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

you may also like