Friday, October 9, 2026

இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ள யேமனில் செயற்படும் ஹவுதி அமைப்பு


இஸ்ரேலுக்கு எதிராக லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், யேமனில் செயற்படும் ஹவுதி அமைப்பினரும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஏவுகணை தாக்குதலுக்கு யேமனின் ஹவுதி போராட்டக்காரர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஹவுதி அமைப்பினர் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா அவரது சமூக வலைத்தள பக்கத்தில். பலஸ்தீன சகோதர்களுக்கு ஆதரவான எங்கள் தாக்குதல் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காசா எல்லையில் அமைக்கப்பட்டு இருந்த அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 150-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து வெளியான வீடியோவில் இடிந்து விழுந்த குடியிருப்பு பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஹமாஸ் தெரிவித்து இருக்கும் இந்த குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே அக்டோபர் 7 ஆம் திகதி முதல் போர் இடம்பெற்று வருகின்றது. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 ஆயிரத்து 306 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் 3,457 குழந்தைகள், 2,136 பெண்கள் மற்றும் 480 முதியவர்கள் அடங்குவார்கள். அத்துடன் 31 ஊடகவியலாளர்கள் போரில் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

 மேலும், 21 ஆயிரத்து 48 பேர் காயமடைந்துள்ளனர். 1,050 குழந்தைகள் உட்பட 1,950 பேர் காணமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.  

you may also like