- by Editor
- 5 months ago
தமிழுக்கு வருகிறார் மாளவிகா மனோஜ்
-
- by Editor,
- 2 years ago
- in சினிமா செய்திகள்
கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மனோஜ். சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் வளர்ந்த இவர் பின்பு மொடலிங் துறையில் நுழைந்து தற்போது மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகையாகி இருக்கிறார்.
கடந்த ஆண்டு வெளிவந்த 'பரகாசன் பராகட்டே' என்ற படத்தில் அறிமுமான இவர் அதன்பிறகு 'நாயாடி' படத்தில் நடித்தார். தற்போது 'ஜோ' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் ரியோ ராஜ் ஜோடியாக நடிக்கிறார்.
கேரளா, தமிழ்நாடு எல்லையில் இருக்கும் ஒரு கல்லூரியில் நடக்கும் காதல் கதையாக உருவாகிறது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த தமிழ் இளைஞனாக ரியோ ராஜும், கேரளாவை சேர்ந்த பெண்ணாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர். இருவர் காதலுக்கு வரும் பிரச்னைகளும், தீர்வுகளும் தான் படத்தின் கதை.
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் அன்புதாசன், ஏகன், பவ்யா திரிக்கா உள்பட பலர் நடிக்கிறார்கள்.