Friday, October 9, 2026

யாழ். ஆஸ்பத்திரி மருத்துவக் கழிவுகளுக்கான எரியூட்டி கோம்பையன்மணலில் திறப்பு


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உருவாக்கப்பட்ட எரியூட்டி திறந்து வைக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட குறித்த எரியூட்டி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

வைத்தியசாலை மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி காணப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் எரியூட்டி தற்போது அமைக்கப்பட்டுள்ளது. 

you may also like