Thursday, October 8, 2026

விமல் வீரவன்ஸவுக்கு நீதிமன்றம் அழைப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அழைப்பாணை விடுத்துள்ளது.

விமல் வீரவன்ஸவுக்கு எதிராக லஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளார் என அவர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி அவர் நேற்று நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில், வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டதுடன், பிரதிவாதியை அன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளது. 

you may also like