Friday, October 9, 2026

வவுனியாவில் இரு தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்!


வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளரின் அரச விடுதியை நேற்றுத் துப்பரவு செய்த திணைக்கள தொழிலாளர்கள் இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு தொழிலாளர்களும் விடுதியை துப்புரவு செய்த போது அங்கிருந்த குளவிகள் கலைந்து இருவருக்கும் கொட்டின. மோசமாகப் பாதிக்கப்பட்ட இருவரும் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர் க்கபபட்டுள்ளனர்.

திணைக்கள தொழிலாளர்களான வே.நாகேந்திரன் (வயது 52), கோணேஸ்வரன் (வயது 46) ஆகிய இருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸெ முன்னெடுத்துள்ளனர்.

you may also like