- by Editor
- 2 years ago
டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலக சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானம்
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
இன்று (20) முதல் நாடு தழுவிய ரீதியில் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரி தன்னிச்சையான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.
நேற்று (19) இரவு கூடிய சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாளை (21) நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.