Wednesday, October 7, 2026

ஜுப் வாகனம் மோதி 3 வயது சிறுவன் பலி: கம்பளையில் சோகம்


கம்பளை நகரில் பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் செலுத்திய ஜுப் வாகனம், ஓட்டோ ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கம்பளையில் இருந்து நாவலப்பிட்டி பகுதிய நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஓட்டோ மீதே, வேகமாக வந்த ஜுப் மோதியுள்ளது. இதனால் ஓட்டோ கவிழ்ந்துள்ளது. ஓட்டோ சாரதியும், அதில் இருந்த சிறுவனும் வெளியில் வீசப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இருவரும் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும், சிறுவன் உயிரிழந்துள்ளார். ஜுப் வாகனத்தைச் செலுத்திய வர்த்தகர் ஒருவரின் மகன், கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

you may also like