Thursday, October 8, 2026

ஹிஸ்புல்லாஹ் தாக்கல் செய்த ஆறு வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி


நிகழ்நிலை காப்புச் சட்டத்தின்கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தாக்கல் செய்திருந்த ஆறு வழக்குகள், நீதவான் நீதிமன்ற நீதிபதியால் செவ்வாய்க்கிழமை (27) அன்று தள்ளுபடி செய்யப்பட்டன.

முகநூல் சமூக வலைத்தளத்தின் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி குறித்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.

இந்த வழக்குகளில் எதிராளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான், சப்ரின் சலாகுதீன், எம்.ஐ. இயாஸ்டீன், ஹனிபா பசில் மற்றும் ஜெசிம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

you may also like