- by Editor
- 6 months ago
ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
-
- by Editor,
- 3 weeks ago
- in இலங்கை செய்திகள்
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின்போது, பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை உயர் நீதிமன்றம் இன்று(15) தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக சில்வா மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன ஆகியோர் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டதன் மூலம், ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் இடம்பெற்ற நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.