Monday, October 12, 2026

ரஷ்ய பல்கலையில் கத்திக்குத்து - கத்திக்குத்து தாக்குதலில் இந்திய மாணவர்கள் காயம்


ரஷ்யாவின் பேஷ்கோர்டோஸ்டான் குடியரசில் உள்ள அஃபா பகுதியில் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த மாணவர்கள் மீது திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். மேலும் தனது உடலையும் கத்தியால் கிழித்துக் கொண்டார்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பொலிசாரையும் அந்த நபர் தாக்கியுள்ளார். இதையடுத்து, பொலிசார் அவரை மடக்கி பிடித்தனர்.

படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அவரை மீட்ட பொலிசார், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

you may also like