Friday, October 9, 2026

கிளிநொச்சியில் அடிகாயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு!


கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுகின்றன என்று தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

you may also like