Saturday, October 10, 2026

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு


ஜனாதிபதித் தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அதேநேரம், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்தியக்கூறுகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

"ஜனாதிபதித் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலானது எந்தவொரு சந்தரப்பத்திலும் பிற்போடப்படமாட்டாது" - என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


you may also like