Saturday, October 10, 2026

நியூசிலாந்து அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்!


நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ஜேக்கப் ஓரம் (Jacob Oram) நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பணியாற்றும் ஷேன் ஜூர்கென்சன் (Shane Jurgensen) பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக ஜேக்கப் ஓரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராகக் கடந்த ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது ஜேக்கப் ஓரம் அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றியிருந்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இந்திய அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் தொடரின் போது, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ஜேக்கப் ஓரம் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நியூசிலாந்து அணியுடன் மீண்டும் இணைவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதனால் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார். 

you may also like