- by Editor
- 4 weeks ago
உலகின் மிக உயரமான பாலம்: ஜம்மு - காஷ்மீரில் திறப்பு.
உலகின் மிக உயரமான பாலம்: ஜம்மு - காஷ்மீரில் திறப்பு.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு - காஷ்மீரின் செனாப் ஆற்றில் இருந்து 359 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்துள்ளார்.
119 கி.மீ தொலைவு கொண்ட இந்தத் திட்டத்தில் 36 சுரங்கப்பாதைகள் மற்றும் 943 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், இப் பாலம் பிரான்ஸின் ஈஃபிள் டவரை விட 35 மீட்டர் உயரமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும். செனாப் நதி ரயில் பாலம் சுமார் 1,486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து கால நிலையிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள யு.எஸ்.பி.ஆர்.எல். திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையே தடையற்ற ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துமென்று கூறப்படுகின்றது.
இப்பாலம் வழியாக இயக்கப்படும் ''வந்தே பாரத்'' ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும்.எனவும் இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.