- by Editor
- 1 year ago
‘மனிதகுலத்திற்கு அவமானம்’: துருக்கி ஜனாதிபதி கவலை
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் படுகொலையின் அளவை எட்டியுள்ளன என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச சமூகத்தின் மௌனம் காப்பது மனிதகுலத்திற்கு அவமானம் என்றும் துருக்கிய ஜனாதிபதி கூறியுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக பாப்பரசர் போப் பிரான்சிஸுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுதந்திர பாலஸ்தீன அரசை அமைப்பதன் மூலம் மட்டுமே மோதலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற துருக்கியின் நிலைப்பாட்டை எர்டோகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.