- by Editor
- 2 years ago
நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு பிறந்தநாளில் அரசின் மரியாதை
-
- by Editor,
- 1 day ago
- in இந்திய செய்திகள்
‘நடிகர் திலகம்’ என போற்றப் படும் சிவாஜி கணேசனின் 99 ஆவது ஆண்டு பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அதன் அருகே அவரது படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அரசு சார்பில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் ஏ.ராஜ்மோகன், வெங்கடரமணன், வன்னி அரசு ஆகியோர் சிவாஜியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் ஏ.அருண் தம்புராஜ், சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் குடும்பத்தினர், திரைப்பட கலைஞர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் மாணிக்கம் தாகூர், அக்கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் ஆகியோர் சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் குழு தலைவர் டி. விஜயசேகர், தமிழ்நாடு காங்கிரஸ் குழு ஓ.பி.சி. பிரிவு தலைவர்டி.ஏ. நவீன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சமூகவலைதளத்தில் முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டபதிவில், ‘‘தனது நிகரற்ற நடிப்பாற்றலாலும், கம்பீரக் குரலாலும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்தநாளில் அவரது மகத்தானகலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
வரலாற்று நாயகர்கள், புராண மாந்தர்கள், சமூகத்தின் எளிய மனிதர்கள் என அனைத்து கதாபாத்திரங்களையும் தன் அசாத்திய நடிப்பால் நம் கண்முன்னே நிறுத்தி, தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்புக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்.
சிவாஜி கணேசனின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.