- by Editor
- 1 year ago
சார்ள்ஸ் இம்முறை போட்டியிட விண்ணப்பிக்கவில்லையாம்: இப்படி சுமந்திரன் கூறுகின்றார்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட எமது கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் வேட்பாளர் தெரிவுக்குழு உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, 'வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இம்முறை போட்டியிடவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையில் அவர் போட்டியிடுகின்றாரா?" - என்று என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன், "முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தான் இம்முறை போட்டியிடவில்லை எனத் தெரிவித்திருந்தார். தற்போது அவர் போட்டியிடுகின்றார் எனச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன என்று கூறுகின்றீர்கள். அவ்வாறு எமக்குத் தெரியாது. அவர் போட்டியிட இம்முறை விண்ணப்பிக்கவில்லை." - என்றார்.