Friday, October 9, 2026

தென் கொரிய பதில் ஜனாதிபதியாக ஹான் டக் சூ மீண்டும் நியமனம்


தென் கொரிய பிரதமர் ஹான் டக் சூவின் பதவி நீக்கத் தீர்மானத்தை அந்த நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ள நிலையில், அவர் மீண்டும் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி யோன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை அறிவித்தமைக்காக பதவிநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது.

இந்தநிலையில், பதில் ஜனாதிபதியாக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சி மீண்டும் பதில் ஜனாதிபதியான ஹான் டக்-சூவுக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீர்மானமொன்றை கொண்டுவந்ததன் பின்னர் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்த சோய் சாங்-மோக் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

you may also like