Wednesday, October 7, 2026

'விஜய்யின் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது '


“நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தர வாக்குகள் இல்லாததால் விஜய் வருகை சீமானுக்கு யதார்த்தமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது”

- இவ்வாறு சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,

“விஜய் தனது கொள்ளையை தெளிவாக, வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

மேலும் அவரது மாநாட்டில் உத்வேகம் இருந்தது. அது அமைப்பாக மாறி, தேர்தலை சந்திக்கும் அளவுக்கு செல்லுமா? என்பதை காலம் தான் சொல்லும். சாதுரியமாக அல்லது பிம்பத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பார்களா என்பதை பார்க்க வேண்டும்.

அரசியல் கட்சியின் செயல்பாடு, நடத்தை, கொள்கை போக, போக தான் தெரியும். சீமான் கட்சிக்கு நிரந்தர வாக்குகள் கிடையாது. இதனால், அவருக்கு யதார்த்தமான அச்சம் வந்துள்ளது.” - என்றார். 

you may also like