Friday, October 9, 2026

சுங்க அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட ரூ.150 கோடி பெறுமதி ஆடைகள் பறிமுதல்!



சுங்கப் பிரிவின் அனுமதியின்றி கொள்வனவு செய்யப்பட்ட 15 கோடி ரூபா பெறுமதிமிக்க ஆடைகள் இலங்கை சுங்கத்தின் சுங்க வருவாய்க் கண்காணிப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்திருந்த சந்தேகத்துக்கிடமான 4 கொள்கலன்கள் ஒருகொடவத்தை பகுதியில் உள்ள பொருள்கள் ஏற்றி இறக்கும் முனையத்தில் சுங்கப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டு நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது கொள்கலன்களில் பிரபல நிறுவனம் ஒன்றிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டு சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க வருவாய்க் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

உரிமையாளர் சுங்கத்திற்குச் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களிலும் துணிவகைகள் மாத்திரம் கொள்வனவு செய்வதற்காகத் தெரிவித்து ஆடைகளைக் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆடைகளின் பெறுமதி சுமார் 15 கோடி ரூபா என சுங்கப் பிரிவினரால் மதிப்பிடப்பட்டுள்ளது. இவை சந்தைக்கு விடுவிக்கப்பட்டிருந்தால் சுங்கப் பிரிவினருக்கு சுமார் ஆறு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் எனவும் சுங்க வருவாய் கண்காணிப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆடைகளைக் கொள்வனவு செய்த உரிமையாளர் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆடைகள் தொடர்பாகச் சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


you may also like